( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் அமரர் மசூர் ஹாஜியார் மறைவுக்குப் பின் இன்னும் எழுச்சிக் காண முடியாது இருக்கின்றது. இருந்தும் மன்னார் பிரதேச சபை எமது நாமத்தை கொண்டுள்ளது. நாம் யாவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய அவசியம் உண்டு என மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ.எம்.இஸ்ஸதீன் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் சினிக்கிழமை (15) மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டு எமது கட்சியின் உயர்வுக்காக உழைத்து மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவியை பெற்றுக் கொண்டதை பாராட்டி நடாத்தப்பட்ட நிகழ்வின்போது மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ.எம்.இஸ்ஸதீன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

மன்னார் பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பாக எருக்கலம்பிட்டி கிராமத்தில் போட்டியிட்டு மன்னாரில் அதிகபடியான வாக்குகளை பெற்ற நான் இதன் மூலம் எமது கட்சிக்கு ஒரு போனஸ் ஆசனத்தையும் பெற்றுக் கொடுத்தவன்.

மன்னார் பிரதேச சபை அன்று ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இடம்பெற்றது.

அந்த நேரத்தில் நான் எமத கட்சியின் கோட்பாட்டுக்கு மாறாக நான் செயல்பட்டிருக்கலாம் என நீங்கள் எண்ணியிருக்கலாம். இந்த நேரத்தில் நான் தலைவரிடம் மன்னிப்பு கோருகின்றேன்.

எட்டு வருடம் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லாத சமயத்தில் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் என்னையும் முறியடிப்பதற்காக ரிஷாட் பதியுதீன் கடும் பிரயத்தனம் மேற்கொண்டார்.

அவ்வாறே ஆழும் கட்சியாக இருந்த காதர் மஸ்தானும் எனக்கு சவாலாக அமைந்திருந்தனர்.

தேர்தல் முடிந்த பின் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் காதர் மஸ்தானும் என்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தவிசாளர் பதவிக்கு தங்களுக்கு ஆதரவு வழங்கும்படி கோரியிருந்தபோதும் அந்நேரம் எனக்கு உப தவிசாளர் பதவி ஆறு மாதங்களுக்கு தரும்படி கேட்டும் அதை தருவதற்கு காதர் மஸ்தான் மறுத்தவிட்டார்.

இந்த நேரத்தில்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நான்கு வருடங்களுக்கு உப தவிசாளர் பதவி தருவதற்கு இனங்கியதாலேயே நான் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் புத்துயிருக்காக செயல்பட்டேன்.

இங்குள்ள கட்சிகள் எல்லாம் ரிஷாட் பதியுதீனை தோற்கடிக்க ஒன்றிணைற்து இருந்தபோதும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்hக என்னை வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளும் இருந்தது.

தவிசாளருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதின் காரணமாக பின் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவிக்கு ஒரு இடைக்காலத் தேர்தல் இடம்பெற்றது.

இதிலும் எமது முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் பெயர் துலங்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை வைத்தே நான் காயை நகர்த்தி இவ் சபையில் எமது கட்சியன் இரு உறுப்பினர்களே இருந்தபோதும் இன்று எமது கட்சி மன்னார் பிரதேச சபையை தனதாக்கி கொண்டது.

வெள்ளிக்கிழமை (14.10.2022) நடைபெற்ற எமது இடைக்கால வரவு செலவைக்கூட ஏக மனதாக நிறைவேற்றியுள்ளோம் என்பது எமக்குள்ள மதிப்பாகும் என இவ்வாறு தெரிவித்தார்.

ஆகவே அமரர் முன்னாள் அமைச்சர் மசூர் ஹாஜியார் மறைவுக்கு பின் எமது கட்சி இன்னும் நிமிர முடியாது இருப்பதால் நாம் யாவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து எமது கட்சியை வளர்ப்போம் என இவ்வாறு தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *