
(வாஸ் கூஞ்ஞ)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்இ நவராத்திரி பூஜை சிறப்பு வழிபாடு புதன்கிழமை (செப்டெம்பர் 28) இரவு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இச்சிறப்பு வழிபாட்டில்இ இந்திய அமைச்சரவை முன்னாள் அமைச்சரும் இராஜ்யசபாவின் முன்னாள் உறுப்பினருமான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.
நவராத்திரி என்பது வீரம்இ செல்வம்இ கல்வி ஆகியவற்றைக் குறிக்கும் தெய்வங்களான துர்க்கைஇ இலட்சுமிஇ சரஸ்வதி ஆகியோரை நினைவுகூர்ந்துஇ ஒன்பது இரவுகள் நடத்தப்படுகின்ற ஓர் இந்து பண்டிகையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.