
( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் தமிழ் பற்றாளரும் எழுத்தாளரும் முன்னாள் மாந்தை கிழக்கு கிராமோதய சபைத் தலைவரும் முன்னாள் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான பி.எம்.செபமாலை அவர்களின் நல்லடக்கம் வெள்ளிக்கிழமை (30.09.2022) அவரின் கிராமமான ஆட்காட்டிவெளி அண்ணாரின் இல்லத்திலிருந்து புனித சவேரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலியுடன் வல்லாத்தாப்பிட்டி துயிலும் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவரின் உடலுக்கான இறுதி மரியாதை செலுத்தும் முகமாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன் , விநோதநோகராதலிங்கம் , வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் உட்பட மதத் தலைவர்கள் அரசியல் வாதிகள் இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் பலர் தங்கள் அஞ்சலி உரைகளையும் நிகழ்த்தினர்.
அண்ணார் கடந்த புதன்கிழமை (28.09.2022) காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது