மூன்று இலங்கை வீரர்கள் தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில்!

எதிர்வரும் 2023 ஜனவரியில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க இருபதுக்கு20 தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான மூன்று இலங்கை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மகேஷ் தீக்ஷன முன்னதாக ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியினால் இந்த தொடருக்காக முன்னதாக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தற்போது, பிரிட்டோரியா கெப்பிட்டல்ஸ் அணியினால் குசல் மெண்டிஸ் 24,000 அமெரிக்க டொலருக்கும், டர்பன்ஸ் சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் தில்ஷான் மதுஷங்க 15,000 அமெரிக்க டொலருக்கும் வாங்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையின் நட்சத்திர இருபதுக்கு20 வீரர் வனிந்து ஹசரங்க, துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ மற்றும் தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்பட்டவில்லை.

அவர்கள் அதே காலகட்டத்தில் இடம்பெறும் ஐக்கிய அரபு இராச்சிய இருபதுக்கு20 தொடரில் விளையாடத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்கா (CSA) T20 லீக்கில் அணிகளை, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

ஐந்து முறை ஐபிஎல் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுனையும், நான்கு முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ஜோகன்னஸ்பர்க்கையும், டெல்லி கேபிடல்ஸ் பிரிட்டோரியாவையும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் டர்பனையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போர்ட் எலிசபெத்தையும், ராஜஸ்தான் ரோயல்ஸ் பேர்ல் அணியையும் வாங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *