
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மேலதிகமாக 3 இலட்சம் படையினரை அழைக்க முடிவு செய்துள்ளார்.
யுக்ரைனுக்கு எதிரான ராணுவ சூழ்நிலையை எதிர்கொள்ள, தனது இராணுவத்தில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், கூடுதல் படைப்பிரிவை வரவழைக்க ரஷ்ய ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
ரஷ்யாவின் இராணுவ பலத்தை பலவீனப்படுத்த மேற்குலக நாடுகள் இடமளிக்காது எனவும் ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் யுத்த நடவடிக்கை காரணமாக 6,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.