(எம்.வை.எம்.சியாம்)

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 11 ஆம் திகதி சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இந்து வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பலாந்தோட்டை – ரிதிகம வீதியின் பொலன சந்தியை அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ளதுடன் பின்னால் அமர்ந்து பயணித்த இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்தின் போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 21 மற்றும் 25 வயதுடைய வத்தளை, ரிதியகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

விபத்து தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *