யாருக்கு வெற்றி..! தோல்வியை ஏற்றுக்கொண்டது தமிழரசுக் கட்சி

யாருக்கு வெற்றி..! தோல்வியை ஏற்றுக்கொண்டது தமிழரசுக் கட்சி (காணொளி)

இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் இன்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்கு போட்டியாக அரசுக்கு ஆதரவாக இன்னொரு கட்சி உருவாக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவும் செய்யப்பட்டது.<iframe width=”674″ height=”403″ src=”https://www.youtube.com/embed/5v8hRoLEXsc” title=”நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள்: எம்.ஏ.சுமந்திரன்” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” allowfullscreen></iframe>

இந்தத் தேர்தலிலே யாருக்கு வெற்றி

அரச கூலியாக இருந்தவர்கள் தான் அந்த கட்சியை பதிவு செய்தவர்கள். தங்களிடத்தில் எது இல்லையோ அதை தங்களுடைய பெயரிலேயே சேர்த்துக் கொண்டார்கள். ஜனநாயகமாக அவர்கள் செயற்படவில்லை, அந்த நேரத்திலே வீதி வீதியாக சந்தி சந்தியாக நின்று காட்டி கொடுத்துக் கொண்டிருந்தவர்கள்.

அரச கூலிப்படையாக செயற்பட்டவர்கள் பதிவு செய்த அரசியல் கட்சிக்கு பேர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி.

அவ்வாறானவர்கள் இன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை தாங்கள் பாதுகாக்கின்றோம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டியாக அரச கைக்கூலியாக கட்சியை வைத்திருக்கின்ற அவர்கள், இன்றைக்கு அந்தக் கட்சியிலே போட்டியிட்டுக் கொண்டு அதற்குப் பெயர் கூட்டமைப்பு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஜனநாயகம் என்பது மறைந்து விட்டது என்பதை இப்போது ஏற்றுக் கொண்டவர்களாக, அதை இல்லாது ஆக்கிவிட்டு சிறிய டீ ஒன்றை முன்னுக்கு வைத்துக்கொண்டு குறுகிப் போன ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு கட்சி நடத்துவதாக இன்றைக்கு தம்பட்டம் அடிக்கின்றார்கள்.

தமிழரசுக் கட்சியின் கொள்கை

யாருக்கு வெற்றி..! தோல்வியை ஏற்றுக்கொண்டது தமிழரசுக் கட்சி (காணொளி) | We Have Failed Sumanthran Press

 

மக்களுக்கு இந்தத் தேர்தலிலே யார் எவர் என்பது நன்றாக தெரிந்திருக்கும்.

இந்தத் தேர்தலில் எங்களுடைய கட்சி போட்டியாளர்களுக்கு நான் சொல்லுகின்ற விண்ணப்பம் எந்தவித போதை வஸ்துக்களையும் மக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். நெடுங்காலமாக இலங்கை தமிழரசுக் கட்சி சொல்லி வந்த கொள்கையை முன்வைத்து உங்களுடைய பிரதேசத்து மக்களுக்காக நீங்கள் போட்டியிடுங்கள் என்று அனைத்து வேட்பாளர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சம்பந்தரையும் என்னையும் குறை சொல்லுவது பலருக்கு கைவந்த கலையாக இருக்கின்றது. அதைத்தான் இவர்களும் இப்போது கையில் எடுத்திருக்கின்றார்கள்.

சம்பந்தன் யார்? நான் யார்? என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *