யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சாரசபையுடன் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதனையில் புதன்கிழமை (16) சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற ஒருவர் கைது செய்துசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற மேலும் இருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.