
யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கி பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
எனினும், அவருக்கு பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கி பயணித்த வாகன அணிவகுப்பு, அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 1.22 மணியளவில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.