
யுக்ரைன் தொடருந்து நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா, யுக்ரைன் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டு 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது போன்று பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருவதாக யுக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் குறித்த எறிகணை தாக்குதல் காரணமாக சுமார் 12 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொளெடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த தாக்குதல் தொடர்பில் ரஷ்யா இதுவரை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. இதற்கு முன்னதாக யுக்ரைனின் குற்றச்சாட்டுக்களை பல முறை ரஷ்யா மறுத்துள்ளது.