தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு :லக்கி மேன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வெங்கட் பிரபு, மாரி செல்வராஜ், சாம் அண்டன், அஸ்வின் சரவணன், இரா. சரவணன் ஆகியோர் இணைந்து தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டனர்.

வானொலி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், நடிகராகவும் அறிமுகமாகி பிரபலமான பாலாஜி வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘லக்கி மேன்’. இதில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் பாலாஜி, வீரா, அப்துல் லீ, ரேச்சல் ரபாகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்திப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் யோகி பாபுவின் தோற்றமும், அவரது சேர்ட்டில் அர்த்தமுள்ள வகையில் எல் (L) என்ற ஆங்கில எழுத்து இடம்பெற்றிருப்பதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *