
யுக்ரைனில் பொது மக்கள் மற்றும் சொத்துக்களை இலக்கு வைத்து புதிய தாக்குதல்களை நடத்துவதற்கு ரஷ்யா தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
உளவுத்துறையினரின் தகவல்களுக்கு அமைய அமெரிக்கா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பொது மக்களை இலக்கு வைத்து ரஷ்யா இவ்வாறான தாக்குதல்களை நடத்துவது கவலையளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
எனினும் ரஷ்ய தரப்பிலிருந்து இந்த குற்றஞ்சாட்டுக்கு எந்த பதிலும் இதுவரையில் வழங்கப்படவில்லை.
இதேவேளை, யுக்ரைனின் சுதந்திரத் தினத்தன்று ரஷ்ய தரப்பிலிருந்து புதிய தாக்குதல்களை நடத்தக் கூடும் என யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனின் சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.