
யுக்ரைனில் போரிடுவதற்கு ஆயிரக்கணக்கான துருப்புக்களை அழைப்பதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்ரைனில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைக்கு மேலும் 3 இலட்சம் பேர் அழைக்கப்படுவார்கள் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்தல் விடுத்துள்ளார்.
தற்போது இராணுவத்தில் பணியாற்றவில்லை என்றாலும், ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் யுக்ரைனில் போரிட அழைக்கப்படுவார்கள் என அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
யுக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என அவர் அறிவித்த, ஒரு நாளுக்கு பிறகு இந்த அழைப்பை விடுத்தார்.
இதற்கு எதிராக மொஸ்கோவ் மற்றும் சென் பீட்டர் பர்க் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பை அடுத்து ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதற்கான சகல விமான அனுமதி சீட்டுகளும் விற்று தீர்க்கப்பட்டுள்ளன.