
ரஷ்யா இன்று ஏவிய 54 ஏவுகணைகளை தான் சுட்டு வீழ்த்தியதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.
யுக்ரைன் மீது இன்று தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை ரஷ்யா இன்று நடத்தியது.
இந்நிலையில், ரஷ்ய ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை தான் சுட்டு வீழ்த்தியதாக யுக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது.
‘இன்று 69 ஏவுகணைகள் ஏவப்பட்டன. எதிரிகளின் 54 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன’ என யுக்ரையின் பிரதம படைத்தளபதி ஜெனரல் வலேரி ஸலுஸ்னி கூறியுள்ளார்.
ரஷ்யா இன்று 120 இற்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவியதாக யுக்ரைன் ஜனாதிபதியின் பேச்சாளர் மிகாய்லோ பொடிலியாக் முன்னர் தெரிவித்திருந்தார்.