
ரஷ்யாவுக்கு செல்லும் வான் அஞ்சல்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் இடம்பெறாததால் ரஷ்யாவிற்கு அஞ்சல்களை அனுப்புவதற்கு முடியாமல் உள்ளது என்று அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கடிதங்கள் மற்றும் பொதிகள் தவறாக கையாளப்படுத்தற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் எந்தவொரு இடைமாறல் போக்குவரத்தின் ஊடாக ரஷ்யாவுக்கான கடிதங்களை அனுப்ப முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ரஷ்யாவிற்கு அஞ்சல்களை அனுப்புவது 3 மாதங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.