ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு – ஐ.நா.சபையில்

ஐக்கிய நாடுகளின் சபை பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரத்தில் முதல் முறையாக இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளது.

உக்ரைன் போருக்குப் பின்னர் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் ஐ.நா.சபையில் கொண்டு வரப்பட்ட நிலையில், இந்த தீர்மானங்களில் ரஷ்யாவை எதிர்த்து வாக்களிக்காமல், இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வந்தது.

இந்நிலையில், ஐ.நா.சபை பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வீடியோ டெலி கான்பரென்ஸ் மூலம் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்ற அழைப்பதை ஏற்க முடியாது என்று, அழைப்பை எதிர்த்து ரஷ்யா ஐ.நா.சபையில் தீர்மானம் கொண்டு வந்தது.

ரஷ்யாவின் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த 13 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *