ரஷ்யா-உக்ரைன் மோதலால் எண்ணெய் விலை உயர்வு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. மேலும் இநத விலையேற்றம்  ‘எங்கள் முதுகை உடைக்கிறது’ என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜெய்சங்கர், வளரும் நாடுகளில் தங்கள் எரிசக்தி தேவைகள் எவ்வாறு நிவர்த்தி செய்யப்படுகின்றன என்பதில் மிகவும் ஆழ்ந்த கவலை உள்ளது என்றார்.

உக்ரைன் போரைப் பற்றி பேசுகையில், இந்த மோதல் யாருடைய நலனுக்காகவும் இல்லை என்று நாங்கள் தனிப்பட்ட முறையிலும்  பகிரங்கமாகவும் நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்திற்கு திரும்புவதே சிறந்த வழியாகும்.

எண்ணெய் விலை பற்றி எங்களுக்கு கவலைகள் உள்ளன, ஆனால் நாங்கள் 2,000 டொலர் தனிநபர் பொருளாதாரத்தில் இருக்கிறோம். எண்ணெய் விலை எங்கள் முதுகை உடைக்கும் போது பெரும் கவலையாகின்றது. டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையில் மாற்றம் இல்லாமல் முறையே ₹96.72 மற்றும் ₹89.62 ஆக இருந்தது.

மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் மீது ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், ஜீ-7 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கிரெம்ளினின் வருவாயைக் கட்டுப்படுத்த ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் மீதான எண்ணெய் விலை உச்சவரம்பைக் கொண்டு வந்துள்ளன.

இந்த மாத தொடக்கத்தில், ஜீ-7 நிதி அமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கையில், விலை வரம்பு குறிப்பாக ரஷ்ய வருவாய் மற்றும் உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் திறனைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த இந்தியாவை கூட்டணியில் சேருமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் புது டெல்லி எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் இந்த திட்டத்தை ‘கவனமாக ஆராய்வதாக’ கூறியுள்ளது என்றார்.

மேலும் வாசிக்கicon

முக்கிய செய்திகள்

icon-left
icon-right
news-image

அதியுயர் பாதுகாப்பு வலய விவகாரத்தில் தில்லுமுள்ளு

30 SEP, 2022 | 04:41 PM
news-image

இருபதுக்கு – 20 உலகக்கிண்ண கிரிக்கெட்…

30 SEP, 2022 | 04:35 PM
news-image

சிறுவர்களுக்கு வடக்கில் ஏன் இந்த அவலம்…

30 SEP, 2022 | 02:49 PM
news-image

டிக்டொக், இணைய விளையாட்டுக்கு அடிமையாகும் மாணவர்களின்…

30 SEP, 2022 | 01:34 PM
news-image

வீதி பாதுகாப்பு உலகத் தொடர் இறுதிப்…

30 SEP, 2022 | 01:46 PM
news-image

ஜனாதிபதி இல்லத்திற்குள் நுழைந்த ஒருவர் கைது

30 SEP, 2022 | 01:41 PM

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ;…

2022-09-30 16:43:03
news-image

10 ஆயிரம் கோடி இந்திய ரூபா…

2022-09-30 13:48:05
news-image

ரஷ்யா – உக்ரைன் போர் :…

2022-09-30 13:47:27
news-image

காபுலில் கல்விநிலையமொன்றில் தற்கொலை தாக்குதல் -…

2022-09-30 12:11:12
news-image

வளர்ப்பு மகனை தவறான வழிக்குச் செல்ல…

2022-09-30 13:43:09
news-image

பெண்­ணாக மாறு­வ­தற்கு முன் 7 சிறார்­களை…

2022-09-30 13:42:26
news-image

3 ஆம் சார்ள்ஸ் மன்னரின் உருவம்…

2022-09-30 13:41:21
news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா – ஜப்பான்…

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -…

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான…

2022-09-29 14:31:59

கருத்து

  • தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு – வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி

    25 SEP, 2022 | 11:25 AM
  • அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்

    08 AUG, 2022 | 09:07 AM
  • நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் – கலாநிதி ஜெகான் பெரேரா

    08 AUG, 2022 | 09:15 AM
  • நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்

    08 AUG, 2022 | 09:12 AM
  • போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்

    27 MAY, 2022 | 11:24 AM

மேலும் வாசிக்கicon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *