மன்னன் ராஜராஜ சோழனை சைவ சமயத்தில் மட்டுமே அடைக்க முடியாது எதிரைன திரௌபதி, பகாசூரன் பட இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்,

ராஜராஜ சோழனை இந்து அரசனாக்க முயற்சிக்கிறார்கள் என வெற்றிமாறன் கூறியதை அடுத்து இது குறித்து நடிகர் கருணாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது .

சமீபத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த பின் கமல்ஹாசன் பேட்டி அளித்தபோது ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற ஒன்று இல்லை என்றும் ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்தான் இந்து மதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ராஜ ராஜனை சோழனை சைவ சமயத்தில் மட்டுமே அடைக்க முடியாது என இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இன்னொருமுறை நுணுக்கமான கவனித்தால் தெரியும் ராஜ ராஜ சோழனை இந்து அரசன் என குறிப்பிடுவதற்குக் காரணம் தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், பொன்னியின் செல்வன் படத்தில் பழுவேட்டயர் வேடத்தில் நடித்த நடிகர் சரத்குமர், ”மாமன்னன் ராஜ ராஜசோழன் இந்துவா? சைவமா? வைணவமா? இந்தச் சர்ச்சை எல்லாம் நாட்டிற்குத் தேவைதானா? கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை வந்ததா என ஆராய்ச்சிசெய்து என்ன சாதிக்க போகிறோம் ”எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *