ருமேனியாவில் தொழில் வழங்குவதாக சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்து, நேர்முகப் பரீட்சை நடத்திய வெளிநாட்டவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பதுளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.