லண்டனில் வீட்டு வாடகை இத்தனை லட்சங்களா… அல்லல்ப்படும் மக்கள்

LondonIndia
 2 மணி நேரம் முன்

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வீட்டு வாடகை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டனுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் பல வெளிநாட்டினர், பெரும்பாலும் வீடுகளை குத்தகை அல்லது வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம்.

கடந்த 3 ஆண்டுகளில் கொரோனா அச்சுறுத்தலால் பலரும் சொந்த ஊர் திரும்பியதால், பல வீடுகள் குடியிருப்பாளர் இன்றி வெறுமையாகின.

தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், மீண்டும் லண்டனுக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

 

இந்திய மதிப்பில் 2 ,50,000

லண்டனில் வீட்டு வாடகை இத்தனை லட்சங்களா... அல்லல்ப்படும் மக்கள் | London House Rent Fees Increase Per Month

இதனால் வாடகை வீடுகளுக்கான மதிப்பும் அதிகரித்துள்ளது. அதன் தாக்கமாக வாடகையை உயர்த்துவதில் வீட்டு உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில், லண்டனில் ஒரு மாத சராசரி வீட்டு வாடகை இந்திய மதிப்பில் 2 ,50,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் மாதம் 3 லட்சம் ரூபாய் வரை வாடகை வசூலிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் 9.7 சதவீதம் வாடகை உயர்ந்துள்ளது. லண்டனில் உயர்ந்தப்பட்ட மின்சார கட்டணத்துடன், வாழ்க்கைச் செலவினங்களை பூர்த்தி செய்ய முடியாமல் பலர் திண்டாடி வரும் நிலையில், வாடகை உயர்வு கூடுதல் சுமையாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *