தற்போது லிட்ரோ எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதால், எரிவாயு வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என் அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சில விநியோகஸ்த்தர்கள் உரிய நேரத்தில் முன்பதிவுகளை மேற்கொள்ள தவறியதால், தற்போது சில இடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த நிலைமை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் முழுமையாக தீர்க்கப்படும் என லிட்ரோ தலைவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.