வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை குறித்து அச்சம் வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் உடனடி கூட்டத்தை கூட்டவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாங்ஹொக்கில் கடந்த 24 மணிநேரத்தில் வடகொரியாவின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக கூட்டப்பட்ட  மாநாட்டில் உரையாற்றுகையில் அன்டனி அல்பெனிஸ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை  எங்களின் பாதுகாப்பிற்கு கண்மூடித்தனமாக ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது எங்கள் பிராந்தியத்தை ஸ்திரதன்மை இழக்க செய்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வடகொரியாவின் இந்த நடவடிக்கை ஜப்பான் மற்றும் தென்கொரிய மக்களிற்கு மன அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது இந்த தூண்டுதல் நடவடிக்கை பல ஐநாவின்பல  தீர்மானங்களை மீறுகின்றது இதனை உடனடியாக நிறுத்தவேண்டும் என  அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தை கூட்டுவதற்கு அவுஸ்திரேலிய  ஆதரவளிக்கின்றது என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் வடகொரியாவின் இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கின்றோம் தேவைப்பட்டால் வேறு நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏவுகணைகளின் இயல்பு குறித்து இன்றைய சந்திப்பில் நாங்கள் ஆராய்ந்துள்ளோம் இந்த ஏவுகணைகள் கண்டங்களிற்கு இடையிலானவை இதனால் எங்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து இதன் காரணமாகவே இதனை சர்வதேச அளவில் கண்டிக்கவேண்டும் எனவும் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *