
வடக்கு அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 26 பேர் மரணித்தனர். அத்துடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துனீசியாவுக்கு அருகில் உள்ள எல் ட்ராப் எனும் பிரதேசத்தில் 24 பேரும், செட்டிப் பகுதியில் 2 பேரும் மரணித்ததாக அந்தநாட்டின் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தீயணைப்பு வீரர்கள் உலங்கு வானூர்திகளை பயன்படுத்தி தீப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டுத் தீ ஏற்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 350 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வடக்கு அல்ஜீரியா வருடாந்தம் காட்டுத் தீயினால் பாதிக்கப்படுவதுடன் கடந்த ஆண்டில் 90 பேர் வரை உயிரிழந்தனர். அத்துடன் 1 இலட்சம் ஹெக்டேருக்கும் அதிக வனப்பகுதி அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.