வடக்கு கிழக்கில் பெப்ரவரி 4ஆம் திகதி ஹர்த்தால் ..!
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பெப்ரவரி 4ஆம் திகதி கடைகள்,வர்த்தக நிலையங்களை பூட்டி போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஹர்த்தால் முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரிநாள் பேரணி
இன்று யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.<iframe width=”674″ height=”403″ src=”https://www.youtube.com/embed/tFA2Q01Oe5w” title=”பெப்ரவரி 4ம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” allowfullscreen></iframe>
எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி இடம்பெறவுள்ள நிலையில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.