
(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியில் கடந்த வாரம் நிலவிய கடும் குளிருடனான காலநிலை காரணமாக இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரை 1660 மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள கடைகள் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்தன.
கிழக்கு மாகாணத்தில் இறந்த கால்நடைகள் மற்றும் ஆடுகளை மனித நுகர்வுக்கு விற்க முயற்சிப்பதாக வதந்திகள் பரவின.
இதன்மூலம், இவ்வாறான முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலசிய சீரற்ற காலநிலை காரணமாக இன்று நண்பகல் 12 மணி வரை மாடுகள் மற்றும் ஆடுகள் உட்பட மொத்தம் 1660 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.