: வட மாகாணத்தில் காணிப் பிரச்னைகளுக்கு உள்ளவர்களுக்கு ‘மெசிடோ’ நிறுவனம் வழிகாட்டுகின்றது தலைவர் யட்சன் பிகிராடோ

( வாஸ் கூஞ்ஞ) 25.08.2022

வட மாகாணத்தில் காணி தொடர்பாக பல பிரச்சனைகள் காணப்பட்டு வருகின்றபோதும் இதனால் பாதிப்புற்றோருக்கு எவ்வாறு தீர்வு பெற முடியும் என்பதை சட்ட ரீதியான ஆலோசனை வழங்குவதற்காகவே  சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமானது இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது என சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யட்சன் பிகிராடோ இவ்வாறு தெரிவித்தார்.

‘மெசிடோ’ நிறுவனத்தினால் அதாவது சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமானது வட மாகாண காணி அபகரிக்கப்பட்ட குரல் என்ற தொணிப் பொருளில் மன்னாரில் இவ் நிறுவனத்தின் தலைவர் யட்சன் பிகிராடோ தலைமையில்  கருத்தமர்வு ஒன்று இடம்பெற்றது.

செவ்வாய் கிழமை (23.08.2022) காலை பத்து மணி தொடக்கம் மாலை நான்கு மணிவரை நடைபெற்ற இவ் கருத்தமர்வில் வட மாகாணத்திலுள்ள மன்னார்  . வவனியா , கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் காணிப் பிரச்சனை தொடர்பான தெரிந்தெடுக்க்பட்ட தலா பத்து பேர் வீதம் ஐம்பது பேர் இவ் அமர்வில் கலந்து கொண்டனர்.

இவர்களின் காணி தொடர்பாக சட்ட ஆலோசனை வளவாளராக மன்னார் மாவட்டத்தில்  சிறந்த வழக்கறிஞர்களாக திகழும் சட்டத்தரனி எஸ்.டினேஸ் , சட்டத்தரனி திருமதி எஸ்.புராதினி மற்றும் மன்னார் மனித உரிமைகள் ஆiணைக்குழு சட்டத்தரனி மோ.பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு காணி தொடர்பான சட்ட திட்டங்களை தெளிவுப்படுத்தினர்.

இவ் கூட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யட்சன் பிகிராடோ கருத்து தெரிவிக்கையில்

வடக்கு மாகாணத்தில் பலர் தனியார் காணகளாக இருக்கலாம் அல்லது தங்களுக்கு வழங்கப்பட்ட அரச காணிகளாக இருக்கலாம் தற்பொழுது பலர் காணிப் பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இவ் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற முடியாது தவித்துக் கொண்டு இருப்பது கண்கூடாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் நாங்கள் நாம் அனைவரையும் அழைக்காது தெரிந்தெடுக்கப்பட்டவர்களை அழைத்து மாவட்டங்களிலுள்ள பொதுவான காணிப் பிரச்னைகளையும் மற்றும் உங்கள் தனிப்பட்ட காணிப்பிரச்சனைகளுக்க எவ்வாறு திர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்கிலேயே இவ் அமர்வை முன்னெடுத்துள்ளோம்.

அந்த வகையில் நீங்கள் இது தொடர்பாக உங்களினதும் பொதுவான பிரச்சனைகளை முன்வைத்துள்ளீர்கள்.

இவ் பிரச்சனைகளை நாம் எவ்வாறு கூட்டாகச் சேர்ந்து செயல்படப் போகின்றோம் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

இவ் காணிப் பிரச்சனையை தீர்க்க சட்ட ரீதியாகவும் இருக்கலாம் அல்லது பரிந்துரையாகவும் அமையலாம் அல்லது நீதி மன்றத்தை நாடியும் செயல்படலாம் அத்துடன் அரச அதிகாரிகளுடனான சந்திப்புக்கள் கலந்துரையாடல் பரிந்துரையாடல் மூலமாகவும் இவ்வாறு பல வடிவங்களில் நாம் இழந்த காணிகளை மீட்டெடுக்க வழிகள் இருக்கின்றன.

ஆகவே முதலில் நீங்கள் உங்களுக்கு தரப்பட்டு படிவங்களை சரியான முறையில் பூர்த்தி செய்து வழங்கும் பட்சத்தில் உங்கள் மாவட்டங்களில் உள்ள குழுக்களுக் ஊடாக உங்கள் பகுதியிலுள்ள எங்கள் சக நிறுவனத்துக்கூடாகவும் சட்டத்தரனிகளின் ஆலோசனைகள் பெற்று  நாம் உங்கள் காணிப் பிரச்சனை தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *