
வட மாகாண விளையாட்டு விழாவில் வவுனியா மாவட்டத்தைச் செர்ந்த சசிகுமார் டனுசன் ஒரு தங்கம் உட்பட 2 பதக்கங்களை வென்று பலத்த பாராட்டைப் பெற்றார்.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற இவ் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சசிகுமார் டனுசன் வென்றெடுத்தார்.
1,500மீற்றர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள், 37.00 செக்கன்களில் ஓடி முடித்து சசிகுமார் டனுசன் வெற்றிபெற்றார்.
இப் போட்டிக்கு முந்தைய தினத்தன்று நடைபெற்ற 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள், 09.9 செக்கன்களில் ஓடி முடித்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.