வனிந்து ஹசரங்க முன்னேற்றம்!

சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை பெற்ற வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இந்த தரவரிசையில் 5ஆம் இடத்தில் இருந்த வனிந்து ஹசரங்க ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியின் பின்னர் இவ்வாறு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இதில் வனிந்து ஹசரங்க 13 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் வாசிக்கலாம் – மஹேலவின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

அத்துடன், 2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் – 12 சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான சுற்று போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராகவும் வனிந்து ஹசரங்க தெரிவாகியிருந்தார்.

இவர் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இந்த 3 போட்டிகளில் 63 ஓட்டங்களை வழங்கிய வனிந்து ஹசரங்க ஒரு ஓட்டமற்ற ஓவரையும் வீசியுள்ளார்.

விராட் கோலியின் புதிய சாதனை!

இதேவேளை, இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை விராட் கோலி இன்று(2) தனதாக்கிக்கொண்டார்.

பங்களாதேஸ் அணியுடனான இன்றைய போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை இந்திய அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, விராட் கோலி இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மொத்தமாக 1,030 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இதையும் வாசிக்கலாம் – பங்களாதேஸ் அணிக்கு 185 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இதுவரை, இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற வரிசையில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன முதலிடத்தில் இருந்தார்.

இவர்மொத்தமாக 1,016 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இந்நிலையில் தற்போது விராட் கோலி மஹேல ஜயவர்தனவின் சாதனையை முறியடித்துள்ளார்.

அத்துடன், இந்த தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் 956 ஓட்டங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

மேலும், தற்போது விளையாடி வரும் வீரர்களில் ரோஹித் சர்மா 921 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 781 ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசன் 729 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 665 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *