வன்னி மாவட்ட மக்களின் பிரச்சினை தொடர்பாக அமைச்சர்கள் டக்ளஸ் தேவானாந்த மற்றும் மஸ்தான் எம்.பி. பிரதிநிதிகள் சகிதம் அமைச்சருடன் சந்திப்பு

( வாஸ் கூஞ்ஞ)

வட மாகாணத்தில் கமத்தொழில்இ வன ஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று கமத்தொழில் வன ஜீவராசிகள் மற்றும் வனவள அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்றது.

-கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற குறித்த இவ் நிகழ்வில்

வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மன்னார்இ வவுனியாஇ முல்லைத்தீவு ஆகிய மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற வாழ்வாதார காணிகள்இ வதிவிடக் காணிகள்இ விவசாய செய்கைஇ மேய்ச்சல் தரைகள்இ சத்துணவு திட்டம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கைகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் விவசாய அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் வனவளத்துறையின் ஆளுகைக்குள் இருக்கின்ற விவசாய மற்றும் மேய்ச்சல் தரைக்கு உகந்த இடங்களை விடுவிப்பது தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சாதகமான முடிவுகளும் எட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்லஸ் தேவானந்தாஇ வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள்இபொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.(60)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *