வருடாந்த மடு மாதா திருவிழா சுவிஸ் நாட்டில்

(வாஸ் கூஞ்ஞ) 16.08.2022

சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆண்மிகப் பணியகத்தினால் வருடா வருடம் கொண்டாடப்படும் மடு மாதா திருவிழா இந்த வருடமும் பொது திருவிழாவாக கொண்டாடுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என சுவிஸ் ஆன்மிக பணியகம் தெரிவித்துள்ளது

கடந்த ஆண்டுகளில் கொரோணா வைரஸ் தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களோடு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுத்து இறையாசீர் வழங்கப்பட்டது.

இவ்வருடம் இறைமக்களின் பேராதரவோடு மடு அன்னைக்கு விழா எடுக்கப்படவுள்ளது.

இத் திருவிழாவானது இந்த மாதம் 20.08.2022 (சனிக்கிழமை) காலை 10:30 மணிக்கு ஆரம்பமாக இருக்கின்றது.

வருடா வருடம் தமிழ்க் கத்தோலிக்க மக்கள் மட்டுமன்றி பிற சமய மக்களும் இத் திருவிழாவில் கலந்து கொண்டு அன்னையின் ஆசீயை பெற்றுச்செல்லுவது வழமையாக காணப்படுகின்றது.

எனவே இந்த வருடமும் இன மத மொழி கடந்து அன்னையின் இறையாசீரை பெற்றுக்கொள்ள இயக்குனர் மற்றும் அருட்பணி பேரவையினர் அழைத்து நிற்கின்றார்கள்.

#இடம் : மரியஸ்ரைன் மடாலயம்.
Mariastein Abby
Kloster Mariastein.
kloster pl.1,
4115 Metzerlen-Mariastein

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *