வருமானத்தில் 75% உணவுக்கே செலவிடப்படுகிறது!

நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நால்வருக்கு உரிய போசாக்குடன் கூடிய ஒருவேளை உணவு கிடைப்பதில்லை என தேசிய பேரவை உப குழு கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

அத்துடன் வருமானத்தில் 75 சதவீதமான பணம் உணவுக்காக செலவாவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான சிறிய மற்றும் மத்திய தர வேலைத்திட்டங்களை அடையாளங் காண்பதற்கான தேசிய பேரவை உப குழு நேற்று நாடாளுமன்றில் கூடியபோது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

10 வருடங்களாக நிலவும் மந்தபோசனை நிலைமையானது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் வெகுவாக அதிகரித்துள்ளதுடன் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறிய மற்றும் நடுத்தர தீர்வுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் பின்னர் வருமானம் மற்றும் வீட்டுச் செலவினம் தொடர்பான ஆய்வு முன்னெடுக்கப்படவில்லை என்பது இதன்போது கண்டறியப்பட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *