வள்ளுவர் காட்டிய வழியிலிருந்து விலகிச் செல்வதால் அறம் வாழ்க்கை அகன்று செல்லுகின்றது பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தர சர்மா

( வாஸ் கூஞ்ஞ)

மாணவர்கள் மட்டில் இப்பொழுது கீழ்படிவு இல்லை வயது மூத்தவர்களுக்கு ஆசிரியர்களுக்கு பெற்றோர்களுக்கு மதிப்பளிக்காத தன்மை உருவாகி விட்டது பிள்ளைகள் மட்டிலும் மனனவி கணவனை அழைக்கும் விதத்திலும் மரியாதையற்ற செயல்பாடுகளையும் நாம் இப்பொழுது காணக்கூடியதாக இருக்கின்றது இவைகள் மாற வேண்டும் என வடக்கு மாகாணம் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தர சர்மா இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டுதலில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா செவ்வாய்க்கிழமை (16.08.2022) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றபோது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட. வடக்கு மாகாணம் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தர சர்மா மேலும் தெரிவிக்கையில்

இன்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டு;ம் எத்தனை பிள்ளைகளுக்கு தேவாரம் பாட முடியுமென்று எத்தனை பிள்ளைகளுக்கு திருக்குறல் அழகாக சொல்ல முடியும்

சிறு வயதில் நாங்கள் ஆலயங்களுக்குச் சென்றால் ஒலிவாங்கிகளுக்கு முன்னால் நாங்கள் தேவாரம் சொல்வதற்கு முண்டியடிப்போம்.

இப்பொழுது நாம் கடமைகளுக்கு சுழற்சி முறையில் வருவதுபோல் நாங்கள் நண்பர்கள் எங்களுக்குள்ளே ஒரு புரிந்துணர்வுடன் ஆலயங்களுக்குச் செல்லும்போது தேவாரம் புராணமும் போன்ற செயல்பாட்டில் இறங்குவோம்.

ஆனால் இன்றையப் பிள்ளைகள் தேவாராம் சொல்வதற்கு வெட்கம் மேடைக்கு வருவதற்கு மேடைக் கூச்சம். இதற்கெல்லாம் காரணம் கையடக்க தொலை பேசிக்குள் எமது பிள்ளைகள் அடங்கி விட்டார்கள்.

அதாவது கையிலிருந்து தொல்லை கொடுக்கின்ற பேசியாக மாறிவிட்டார்கள். முகநூலில் எமக்கு ஐயாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இருப்பார்கள் எமக்கு அவர்களின் முகங்கள் தெரியாது. அவர்களுடன் உரையாடுவோம் ஆனால் எமது பக்கத்து வீட்டார் பற்றி எமக்குத் தெரியாது.

திருவள்ளுவர் எமக்கு அழகாக தெரிவித்துள்ளார் அதாவது உண்மையான இல்வாழ்க்கை அது அறன். புpறர் பழிக்கின்ற அளவுக்கு இருக்காது ஒழுக்கமான வாழ்க்கையாக அமையுமானால் அது சிறந்த இல்லறம் என்று.

இன்று கணவன் மணைவிக்கு இடையே இல்லற வாழ்வு தெரியாது தவிக்கின்றனர். இன்று பெண் சுதந்திரம் என பேசி பெண்கள் படித்து பட்டம் பெற்று அவளும் தொழில் நோக்கி வீட்டைவிட்டு வெளியேறுகின்றாள்.

நாமும் இப்பொழுது மேலயத்த வாழ்க்கை முறையிலேயே வாழ்ந்து கொண்டே இருக்கின்றோம்.

ஏம்மில் பலர் இப்பொழுது மன அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு காரணம் நாம் ஒருவருடன் ஒருவர் உரையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றோம். மற்றவர்களின் இன்ப துன்பங்கிலும் பங்குபற்ற முடியாத நிலையில் இருந்து வருகின்றோம்.

பெண்ணைப்பற்றி திருவள்ளுவர் சொல்லுகின்றார் பெண் என்பவள் ஒரு நெருப்பு. அவள் நெருப்பை கணவனுக்கு ஏற்றினால் அது ஒரு தீபமாகவும் மாற்றான் கெட்ட சிந்தனையுடன் அனுகினால் அது தீயாக சுடப்பட வேண்டும் இவ்வாறுதான் பெண் இருக்க வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாம் வழி தவறாது வாழ்வதற்காக எமக்கு வித்திட்டு சென்றுள்ளார் வள்ளுவர்.

வள்ளுவர் காட்டிய வழியில் நாம் வாழ்வோமாகில் நாட்டில் கலாச்சாரம் , பிரலாமை , மது பாவனை , தேவையற்ற பிரச்சனைகள் , பாலியல் துஷ்பிரயோகம் போன்றவை இடம்பெறாது

இங்கு ஆண்களையோ பெண்களையோ தனிப்பட்ட முறையில் குறை சொல்ல முடியாது இரு கைகள் தட்டினால்தான் ஓசை எழும்பும். பெண் பெண்ணாக இருந்தால்தான் அவள் மதிக்கப்படுவாள்.

பெண் வீட்டில் பெண்ணாக இருக்கும்போதுதான் அவளை கணவனும் மதிப்பார் அவளும் மகிழச்சியாக இருப்பாள் இதனால் குழந்தைகள் ,சுற்றத்தவர் , சமூகம். மதிப்பது இவ்வாறு விரிவடைகின்றது

இறைவனின் படைப்பில் பெண்கள் அழகாக வர்ணிக்கப்படுகின்றனர். இதனால் கவர்ச்சிகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இதற்கு மேலாக பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் ஆடை அணிகலண்கள் அணிவதில் கவனம் செலுத்துகின்றனர்.

இந்த ஆடை அணியும் விடயத்தில் நான் முஸ்லீம் பெண்களை பாராட்டி நிற்கின்றேன். ஆகவே பெண்களே பெண்களுக்குரிய அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இவை நான்கையும் அணிகலங்களாக அணியுங்கள்.

இன்று அச்சம் அகன்று விட்டது. நாணம் நழுவி விட்டது பயிர்ப்பு பறந்து விட்டது மடம் மறைந்து விட்டது

நாம் எவ்வளவு படித்து பட்டம் பெற்றவர்களாக இருக்கலாம் பணம் படைத்தவர்களாக இருக்கலாம் ஆனால் அடக்கம் எமக்கு அவசியம்.

மாணவர்கள் மட்டில் இப்பொழுது கீழ்படிவு இல்லை வயது மூத்தவர்களுக்கு ஆசிரியர்களுக்கு பெற்றோர்களுக்கு மதிப்பளிக்காத தன்மை உருவாகி விட்டது. ஆகவே மாணவ சமூகமே பிள்ளைகளே கீழ்படிவுடன் வாழத் தெண்டியுங்கள்

மேலும் இன்று பிள்ளைகள் மட்டிலும் மனனவி கணவனை அழைக்கும் விதத்திலும் மரியாதையற்ற செயல்பாடுகளையும் நாம் இப்பொழுது காணக்கூடியதாக இருக்கின்றது இவைகள் மாற வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *