வாரிசு படத்தின் ஷூட்டிங் எப்போது முடியும்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தெலங்கானா என இரு இடங்களிலும் மாறி மாறி நடந்து வருகிறது. படம் சம்மந்தமாக எந்தவொரு புகைப்படமும் வெளியாவதை விரும்பாத படக்குழு பாதுகாப்போடு படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

இப்போது ஐதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தோடு மொத்தமாக முடிகிறதாம். அதன் பின்னர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published.