வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடைக்கான நேரத்தை குறைப்பதற்கு சாத்தியம் இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அமைச்சர் ட்விட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்ற நிலையில், அனைத்து நீர் மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் மின்சார உற்பத்தியும் அதிகரித்துள்ளமையினால் வார இறுதி நாட்களில் மின்விநியோகத்தடைக்கான நேரத்தினை குறைக்கமுடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்விநியோகத்தை முகாமை செய்வதற்கு தற்போது நாளாந்தம் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.