விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது – அமெரிக்கா!

“தமிழீழ விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் 2009 இன் பின்னர் சிறிலங்காவில் முடக்கப்பட்டாலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது.”

குறித்த விடயத்தினை அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பயங்கரவாதம் குறித்த 2021 ம் ஆண்டிற்கான அமெரிக்காவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு

 

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது – அமெரிக்கா! | Ltte International Network To Function America

தமிழீழ விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களின் மூலம் நிதிகளை திரட்டி தமது செயல்பாடுகளை சர்வதேச அளவில் முன்னெடுத்து வருவதாக அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2009 இன் பின்னர் சிறிலங்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் இல்லாவிடினும், சர்வதேச அளவில் அதன் செயல்பாடுகள் தொடர்ந்தும் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவாளர்களும், அவர்களின் வலையமைப்பும், நிதி ஆதரவும் தொடர்வதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *