
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 06 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இராணுவ உயர்நிலை அதிகாரிகள் இருவர், விமானிகள் இருவர் உள்ளிட்ட அறுவரே உயிரிழந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது உலங்கு வானூர்தி விபத்து இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெள்ளநிவாரணப்பணிகளுக்காக சென்ற உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழந்தனர்.
இதற்கமைய இந்த மாதத்தில் மாத்திரம் பாகிஸ்தானில் உலங்கு வானூர்தி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.