
வீடு செல்லத் தயாராகும் மொட்டு கட்சியின் 20 எம்.பிக்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.
அவர்களுள் அதிகமானவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் தீர்மானித்துள்ளனர்.
அரசுக்கு எதிரான போராட்டம்
அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தால் அதிருப்தியடைந்தே இவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.
இதேவேளை தற்போதைய நிலையில் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்று இவர்கள் கருதுவதும் இவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு மற்றுமொரு காரணம் என்றும் தெரியவருகின்றது.