
(வாஸ் கூஞ்ஞ)
இலங்கையில் பொருளாதார பிரச்சனை தலை தூக்கியதைத் தொடர்ந்து மன்னார் பேசாலையைச் சேர்ந்த திரு.அல்போன்ஸ் பீரீஸ் அவர்கள் இக் கிராமத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் சேதன பசளை மூலம் வீட்டுத் தோட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையில் சமூர்த்தியின் ஆதரவில் வீட்டுத் தோட்டத்துக்கான கன்றுகள் உருவாக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதுடன் இதற்கான சேதன பசளையும் வழங்கப்பட வேண்டும் என்ற சிந்தனையில் சேதன பசளை தயாரிக்கும் செயல்பாட்டிலும் இறங்கியுள்ளார்.
இவ் சேதன பசளையை தயாரிக்கும் ஆரம்ப நிகழ்வை பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் இறை வேண்டுதலுடன் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு
திரு.அல்போன்ஸ் பீரீஸ் அவர்கள் பரதகுல மீனவ சமூகமாக இருந்தாலும் ஒரு சிறந்த விவசாயி. அத்துடன் ஒரு சிறந்த இசை அமைப்பாளர். பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் நடைபெறும் திருப்பலி வேளையில் பாடகர் குழாம் பாட்டு இசைக்க அவர்களுடன் இனைந்து பாடுவதுடன் இவ் பாடல்களுக்கு ஆர்மோனியம் மூலம் இசை அமைப்பதும் குறிப்பிடத்தக்கது.