(எம்.எம்.சில்வெஸ்டர்)

வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி 12 இலட்சத்திற்கும் அதிகமான பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக,  பண்டாரகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக பண்டாரகம பொலிஸாரால் விசாரணை நடவடிக்கைகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதே கடந்த 9 ஆம் திகதியன்று சந்தேக நபர் கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 38 வயதுடைய பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன், இதுபோன்ற பண மோசடி சம்பவம் தொடர்பில் சந்தேக நபருக்கு  எதிராக இங்கிரிய பொலிஸ் நிலையத்திலும் 6 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *