வெள்ளத்தால் பாதிப்புகளுக்கு உள்ளாகியோருக்கு அக்கரைப்பற்று மக்கள் உதவிக்கரம்.

வாஸ் கூஞ்ஞ) 01.09.2022

அன்மைகாலமாக மலையகப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக நாவலப்பிட்டி பகுதியிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதை கவனத்தில் எடுத்துக் கொண்ட அக்கரைப்பற்று ஜம்மியதுல் உலமா , சதாத் நிதியமும் மற்றும் ‘இன்ஸ்பீரிங் யுத்ஸ்’ ஆகியன இனைந்து அக்கரைப்பற்று மக்களின் அன்பளிப்பு என்ற தொனியில் பாதிப்டைந்த மக்களுக்கு பொருட்கள் வழங்கி வைத்துள்ளனர்.

நாவலப்பிட்டியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இவ் மக்களுக்கு பாடசாலை உபகரணங்கள் , உணவு பொதிகள் மற்றும் தலையனை பொருட்கள் என்பன நாவலப்பிட்டி நகர் ஜும் ஆ சூபள்ளிவாயலில் வைத்து நாவலப்பிட்டி பள்ளி வாயல்கள் சம்மேளன பிரதிநிதிகளிடமும் அவர்கள் ஊடாக பாடசாலைகள் மாணவர்களுக்கும் கையளித்தனர்.

நாவலப்பிட்டியில் உள்ள அல் அஸ்ஹர் பாடசாலை ,  கதிரேசன் பாடசாலை , ஒக்ஸ்வேட் பாடசாலை  மற்றும் அல் சபா  பாடசாலைகளிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான  உபகரணப் பொருட்களே வழங்கி வைக்கப்பட்டன.

உணவு பொதிகள் மற்றும் தலையனைகள் ஆகியன நாவலப்பிட்டி நிவாரண சேமிப்பு மையத்தில் வழங்கப்பட்டது.

இதற்கhன உதவிகளையும் வாகன வசதிகளையும் தனவந்தர்கள; வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *