ஷபோரிஷிஹியா பேரழிவு முழு ஐரோப்பாவையும் அச்சுறுத்தும் – யுக்ரைன் ஜனாதிபதி

யுக்ரைனின் தெற்கில் உள்ள ஷபோரிஷிஹியா அணு மின்நிலையத்தில் ஏற்படுகின்ற பேரழிவு முழு ஐரோப்பாவையும் அச்சுறுத்தும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

குறித்த மின்நிலையத்தின் மறைவில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் அருகிலுள்ள நகரங்கள் மற்றும் பொது இடங்கள் மீது எறிகணை தாக்குதல் நடத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தநிலையில் ஷபோரிஷிஹியா அணு மின்நிலையத்தில் கதிர்வீச்சு சம்பவங்கள் பதிவாகுமாயின், அது ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி, ஜோர்ஜியா மற்றும் அதிக தொலை தூரத்தில் உள்ள நாடுகளையும் பாதிக்கப்படலாம் என அவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இவை அனைத்தும் காற்றின் திசை மற்றும் வேகத்தை மட்டுமே சார்ந்துள்ளது.

ரஷ்யாவின் நடவடிக்கைகள் பேரழிவு ஏற்படுத்தினால், அதன் விளைவுகள் இதுவரையில் அமைதியாக உள்ளவர்களையும் தாக்கக்கூடும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக புதிய கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஷபோரிஷிஹியா அணு மின்நிலையம் அமைந்துள்ள பகுதி கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் அதனை ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கும், அதிக இராணுவத்தினரை நிலை நிறுத்துவதற்கும் ரஷ்யா பயன்படுத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐரோப்பாவில் மிகப்பெரிய அணு மின்நிலையமாக ஷபோரிஷிஹியா அணு மின்நிலையம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.