ஷாருக்கானின் ’’டான்‌-3’’ தொடங்கப்படுமா‌? ஹேஸ்டேக் டிரெண்டிங்

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர்  நடிப்பில் டான்3 உருவாக வேண்டுமென ரசிகர்கள் DON-3 என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர், தற்போது,  பதான் என்ற படத்தில், ஜான் ஆபிரகான், தீபிகா படுகோனே ஆகியோருடன் நடித்து வருகிறார்.

இப்படம் அடுத்தாண்டு ஜனவரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

அதேபோல்,அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையில் நயன்தாரா ஆகியோருடன் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படமும் வேகமாக வளர்ந்து வருகிறது.

இந்த நிலையில்,ஷாருக்கான் நடிப்பில், கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் டான். இப்படத்தின் மூன்றாவது பாகம் வெளியாக வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்படத்தின் டானாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில்,  அடுத்த பாகத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *