Home உள்நாட்டு இராணுவ தினத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பதவி உயர்வு

இராணுவ தினத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பதவி உயர்வு

22
0

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிகழ்வினை முன்னிட்டு 567 இராணுவ அதிகாரிகள், 10,368 வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மேஜர் ஜெனரல் அந்தஸ்துக்கு 8 சிரேஷ்ட பிரிகேடியர்களும், பிரிகேடியர் பதவிக்கு 17 கர்னல்களும், கர்னல் பதவிக்கு 42 லெப்டினன்ட் கர்னல்கள், 60 மேஜர்கள் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கும் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

256 கேப்டன்கள் மேஜர் பதவிக்கும், 10 லெப்டினன்ட்கள் கேப்டன் பதவிக்கும் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

இது தவிர மேலும் பல பதவி உயர்வுகள் ஒக்டோபர் 10 ஆம் திகதி 72 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here