Home உள்நாட்டு லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பில் சிறிய மாற்றம் !

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பில் சிறிய மாற்றம் !

50
0

லிட்ரோ ரக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று நள்ளிரவு முதல் முன்னறிவிப்பின்றி அதிகரிக்கப்பட்டது.அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை, 1,257 ரூபாவினால் அதிகரிப்பட்டது. எனினும் இன்று நண்பகல் 75 ரூபாவினால் அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 2675 ஆக காணப்படுகின்றது.

இதேபோன்று 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 503 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதன் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 1071 காணப்படுகின்றது.

 

மேலும் 2.5 கிலோ கிராம் நிறைவுடைய லிட்ரோ எரிவாயுவின் விலை 231 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 14 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 506 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here