இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பிற்கமைய இந்திய இராணுவ பதவி நிலைப் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்திய இராணுவத்தளபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.
அத்தோடு நாளை புதன்கிழமை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் பங்கேற்புடன் பத்தரமுல்லையிலுள்ள இராணுவ தலைமையகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் அவர் பங்குபற்றவுள்ளார்.
அத்தோடு இந்திய படையினரின் பங்கேற்புடன் இடம்பெற்று வருகின்ற ‘மித்ர சக்தி’ இராணுவ கூட்டு பயிற்சிகளின் இறுதிகட்ட நிகழ்வுகளையும் அவர் பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.