தாவரங்களில் இருந்து இசையைக் கேட்கும் வகையில் புதிய கருவியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிளாண்ட்வேவ் எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த கருவியை நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் தொலைபேசியுடன் இணைப்பதன் மூலம் தாவரங்களின் இசையைக் கேட்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலைகளில் இக்கருவியின் இரண்டு மின்முனைகளை வைப்பதன் மூலம் தாவரங்களில் உள்ள மின் மாறுபாடுகளைக் கண்டறிய முடியும் என்று பிளான்ட்வேவ் (Plantwave) இணையத்தளம் கூறுகிறது. செடிகளில் தோன்றும் மாறுபாடுகள் அலைகளாகப் பிடிக்கப்பட்டு, அவை இசையாக மாற்றப்படுகின்றன.
எனினும் ஆரோக்கியமான இலைகள் மட்டுமே இசையை உருவாக்கும் எனவும், இக் கருவியானது MIDI சிந்த்ஸ் மற்றும் டிஜிட்டல் ஓடியோ முறையில் செயற்படும் என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.