Home தொழிநுட்பம் மனைவிக்காக வீட்டைச் சுழல வைத்த கணவர்

மனைவிக்காக வீட்டைச் சுழல வைத்த கணவர்

44
0

நபரொருவர் தனது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வீட்டைச் சுழல வைத்த சம்பவம்  பொஸ்னியாவில் (Bosnia) இடம்பெற்றுள்ளது.

சர்பக் (Srbac) நகரை சேர்ந்த வொஜின் குசிக் (Vojin Kusic) என்ற 72 வயதான நபரே இவ்வாறு , தனது மனைவி ஜபிகாவின் ( Ljubica )  நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்  நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு வீட்டை முழுவட்ட வடிவில் சுழலும் வகையில் அவர் வடிவமைத்துள்ளார்.அந்தவகையில் குறித்த வீட்டை புவியிர்ப்பு விசைக்கு ஏற்ப 24 மணி நேரத்திற்கு ஒருமுறையும், அதேநேரம் அதிகவேகமாக 22 செக்கன்களுக்கு ஒரு முறை சுழலும் வகையிலும் அவர் வடிவமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here