அப்பிள் தொலைபேசியில் மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் கண்டறியும் அம்சம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ‘I phone 13‘ மற்றும் ‘iphone 13 மினி‘ தொலைபேசிகளை அந்நிறுவனத்தின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரி டிம் கும் அறிமுகம் செய்துள்ளார்.
தற்போதுள்ள தொழில்நுட்பத்தைக் காட்டிலும் இவ் வகைத் தொலைபேசிகளிலுள்ள கெமராவில் புதிய சிறப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்ட அப்பிள் 13 சீரிஸானது விற்பனையில் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் பிரபல மருந்து நிறுவனமான biogen ஆகியவை இணைந்து முகத்தை மட்டும் ஸ்கேன் செய்தால் பயனர்களின் மன அழுத்தத்தைக் கண்டறியும் புதிய நவீன தொழில்நுட்பத்தைத் தயாரித்து வருவதாகத் வெளியாகியுள்ள தகவல் அப்பிள் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.