104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலான ஹெரோயின் தொகையுடன் கப்பலொன்றை கைப்பற்றியுள்ளதாக அவுஸ்திரேலியா சனிக்கிழமை கூறியுள்ளது.
நாட்டில் இதுவரை கைப்பற்றப்பட்ட அதிகளவான போதைப்பொருளின் பரிமாற்றம் இவையாகும்.
சட்டவிரோத போதைப்பொருளை இறக்குமதி செய்ததற்காக ஒரு மலேசிய நாட்டவரை கைது செய்ததாகவும் அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பலில் 450 கிலோ எடையுள்ள 1,290 ஹெரோயின் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
செப்டம்பர் 29 அன்று அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய துறைமுகமான மெல்போர்ன் துறைமுகத்தில் இந்த கைப்பற்றல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.