அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கலிபோர்னிய பல்கலைக்கழக வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இரத்த ஓட்டத்தில் பரவிய தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவர் பூரண குணமடைந்து வெளியேறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிளிண்டன் தனது மனைவி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுடன் கைகோர்த்தபடி வெளியேறினார்.
இரத்த தொற்று காரணமாக முன்னாள் ஜனாதிபதி கடந்த செவ்வாய்க்கிழமை கலிபோர்னியா எர்வின் பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.